Category Archives: வெளிநாடு

வெள்ளக்காடாக காணப்படும் கேரளா…!

கேரளாவில் பெய்து வருகின்ற தொடர் மழை காரணமாக இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதோடு, பலர் காயங்களுக்கும் உள்ளாகியுள்ளனர். அத்தோடு, கேரளா முழுவதும் வெள்ளக்காடாக காணப்படுகின்றது. கடந்த சில நாட்களாக கேரளாவில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், நேற்று 24 மணி நேரமும் தொடர்ச்சியாக மழை பெய்தவண்ணம் உள்ளதால், இதில் வெள்ளம் மற்றும் இடி, மின்னல், புயல் என்பவற்றின் தாக்கம் காரணமாக உயிரிழப்புக்கள் நேர்ந்துள்ளது. இந்நிலையில், அங்குள்ள ஆறுகள், நதிகள் அனைத்தும் பெருக்கெடுத்து ஓடுவதால், கேரளாவின் பல […]

7 ரிக்டர் நிலநடுக்கம் – நிலை குலையாமல் தொழுகை நடத்திய நபர்!

பல்வேறு தீவுகளை கொண்ட இந்தோனேசியா நாடு அதிக அளவில் நிலநடுக்கம் ஏற்படும் நெருப்பு வளைய பகுதியில் அமைந்துள்ளது. இதனால் இங்கு அடிக்கடி பூகம்பம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், சுமத்ராவை ஒட்டியுள்ள பாலி மற்றும் லம்பாக் தீவின் அருகே கடந்த திங்கட்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7 ஆக நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் இருந்த பல வீடுகளும், கட்டிடங்களும் இடிந்துள்ளது. இதனால் மக்கள் அலறியடித்து கொண்டு தெருக்களில் […]

கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதியில்லை – அரசு அறிவிப்பு.!

உடல்நிலை குறைவின் காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி சிகிச்சை பலனின்றி இன்று மாலை சுமார் 6.10 அளவில் உயிரிழந்தார். திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு அமெரிக்க அரசு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துவரக்கூடிய சூழலில், கருணாநிதியின் உடலை சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதியின் அருகே அடக்கம் செய்ய முதல்வரிடம் அனுமதி கேட்கப்பட்டதாகவும் ஆனால் அரசு தரப்பிலிருந்து எவ்வித உறுதியான தகவலும் தெரிவிக்கப்படவில்லை என செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார் […]

திமுக தலைவர் கருணாநிதி காலமானார் – அதிர்ச்சியில் தமிழகம்.

உடல் நல குறைவின் காரணமாக கடந்த 28 ஆம் திகதி நள்ளிரவில் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கலைஞருக்கு தொடர்ந்து 11 வது நாளாக மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வந்துள்ளனர். வயது முதிர்வின் காரணமாக மருத்துவ சிகிச்சைகளுக்கு கருணாநிதியின் உடல் ஒத்துழைக்காத காரணத்தினால் அவருக்கு சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி காலமானதாக காவேரி மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. […]

அமெரிக்காவின் சுதந்திர தேவிக்கு இன்றைய நாளில்….?

1884-ம் ஆண்டு(ஆகஸ்ட் 5) இதே தேதியில் அமெரிக்காவின் நியூயார்க் துறைமுகத்தில் அமைந்துள்ள சுதந்திர சிலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. சுதந்திர சிலை, அமெரிக்காவின் நியூயார்க் துறைமுகத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற சிலையாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் இச்சிலையை பிரான்ஸ் நாடு அமெரிக்காவிற்கு அன்பளிப்பாக வழங்கியது. இச்சிலையை வடிவமைத்தவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரெடெரிக் ஆகுஸ்டெ பார்த்தோல்டி ஆவார். அவர் அக்டோபர் 28, 1886 இல் இதனை வழங்கினார். இது சர்வதேச ரீதியில் நட்பையும், விடுதலையையும், மக்களாட்சியையும் வெளிப்படுத்தும் சின்னமாக விளங்குகின்றது. […]

தன் உயிரைக் கொடுத்து குழந்தைகளின் உயிரைக்காத்த தாய்!

சீனாவில் ஹெனான் மாகாணம் ஷுசாங் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதைதொடர்ந்து அங்கிருந்து குடியிருப்பு வாசிகள் வீடுகளில் இருந்து வெளியேறிவிட்டனர். ஆனால் ஒரு வீட்டின் தாய் மற்றும் 2 குழந்தைகள் மட்டும் தீயில் சிக்கி கொண்டுள்ளனர். அவர்களால் தப்பிக்க முடியாதபடி வீட்டின் வெளியே தீ சூழ்ந்து கொண்டுள்ளது. இதனால் அந்த தாய் முதலில் தனது குழந்தைகளை காப்பாற்ற நினைத்து, வீட்டில் இருந்த பெரிய ‘பெட்ஷீட்டை’ ஜன்னல் வழியாக வீசியுள்ளார். அதை கட்டிடத்தின் கீழே […]

இலங்கையில் இதய நோய்ப்பாதிப்பால் அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்

இலங்கையில் இதய நோய் காரணமாக நாளொன்றுக்கு 120 இற்கும் 150 இற்கும் இடையிலானோர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் இருதய நோய்ப் பிரிவின் பிரதானி விசேட வைத்திய நிபுணர் நாமல் கமகே கூறினார். இருதய நோய் சம்பந்தமாக மூன்றாம் நிலை சிகிச்சை செய்யும் போது அதிக செலவு ஏற்படுவதே இவ்வாறான மரணங்கள் ஏற்படுவதற்கு ஒரு காரணம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அனைத்து தரப்பினரும் இணைந்து இதற்காக தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்று விசேட வைத்திய […]

‘இந்தியன்–2’ படத்தில் நடிப்பது அரசியலுக்காகவா?கமல் விளக்கம்.

  பிரச்சனைகளில் சிக்கி 3 வருடங்களுக்கு மேல் முடங்கி இருந்த கமல்ஹாசனின் விஸ்வரூபம்–2 படம் வருகிற 10–ந் தேதி திரைக்கு வருகிறது. உலகம் முழுவதும் 5 ஆயிரம் தியேட்டர்களில் திரையிட திட்டமிட்டு உள்ளனர். தெலுங்கு, இந்தி மொழிகளிலும் வெளியாகிறது. இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. படத்தை விளம்பர படுத்தும் நிகழ்ச்சிக்காக மும்பை, ஐதராபாத் நகரங்களில் சுற்றுப்பயணத்தில் இருக்கிறார் கமல்ஹாசன். அப்போது அரசியல் சினிமா பற்றிய கேள்விகளுக்கு பதில் அளித்து பேசினார். இந்தியன்–2 படத்தில் […]

தரமற்ற பருப்பு வகைகள் சந்தையில்…. மக்களே அவதானம்!

நிறமூட்டப்பட்ட, தரமில்லாத பருப்பு வகைகள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றமை தெரியவந்துள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தின் பல இடங்களில் இவ்வாறான தரமற்ற நிறமூட்டப்பட்ட பருப்புவகைள் விற்பனை செய்யப்படுகின்றமை தெரியவந்துள்ளது. இந்த பருப்பை கழுவும் போது நீர் சிவப்பு நிறமாக மாறும். இந்த பருப்பு மிகவும் சிறியதாகும். பருப்பை வேகவைக்க வழமையை விட கூடுதலான நேரம் எடுக்கும் என்றும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இது பற்றி மக்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும். இவ்வாறான பருப்பு வகைகள் தொடர்பாக […]

அட்லீ-விஜய் படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா?

அட்லீ-விஜய் மூன்றாவது முறையாக இணைகிறார்கள் என்றே தகவல் ரசிகர்களுக்கு குஷி தான். AGS நிறுவனம் தயாரிக்க இருக்கும் இப்படம் குறித்து வேறு எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. ஆனால் அவ்வப்போது சில விஷயங்கள் படம் குறித்து வெளியாகிய வண்ணம் உள்ளது. தற்போது படத்தின் இசையமைப்பாளர் குறித்து சமூக வலைதளத்தில் ஒரு பிரபலத்தின் பெயர் அடிபடுகிறது. அது வேறுயாரும் இல்லை இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் என்று தான் கூறப்படுகிறது. மெர்சலில் தளபதியை ரசிக்க வைத்த ஏ.ஆர் ரகுமான் சர்காரிலும் […]