Category Archives: இலங்கை

விபத்தில் 8 வயது சிறுவன் உட்பட மூவர் பலி…!

வெள்ளவாயவை நோக்கி பயணித்த லொறியொன்றுக்குப் பின்னால், அதே திசையில் பயணித்த பேருந்தொன்று , அந்தலொறியை முந்திக்கொண்டு செல்வதற்கு முயன்றுள்ளது. இதன்போது, எதிர்திசையில் வந்துகொண்டிருந்த முச்சக்கர வண்டியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்தச் சம்பவம் நேற்றிரவு 10:45 மணியளவில் இடம்பெற்றுள்ளதெனத் தெரிவித்த பொலிஸார்,முச்சக்கரவண்டியின் சாரதி, அதன் பின்னாலிருந்து பயணித்த மூவர் படுகாமடைந்து மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னரே, மூன்றுபேர் மரணமடைந்துள்ளனர். சம்பவத்தில் எட்டு வயதான சிறுவன், 19 வயதான இளைஞன் மற்றும் 22 வயதான யுவதி ஆகிய மூவருமே […]

சிறுமிக்கு பொலிஸ் உத்தியோகத்தர் செய்த காரியம்…!

திருகோணமலை – அபேபுர பகுதியில் 16 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை, நேற்று இரவு உப்புவெளி பொலிஸார் கைதுசெய்துள்ளனர். தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர், தனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள 16 வயது சிறுமி ஒருவரிடம், தனது அலைபேசியை காண்பித்து இணைத்தளத்தில் வந்த படங்களை காண்பித்து துஷ்பிரயோகம் செய்துள்ளார். இது தொடர்பில், உப்புவெளி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமையவே, குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் […]

பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பள உயர்வுக்கு தான் அனுமதி வழங்கப்போவதில்லை.

பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பள அதிகரிப்புக்கு தான் அனுமதி வழங்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். எமது வானொலியை கேட்க uyirfm.lk  இந்த லிங்கினை அழுத்தவும்.

முல்லைத்தீவில் -ஆலங்கட்டி மழை!!

கடும் வறட்சியை எதிர் கொண்டுள்ள முல்லைத்தீவில் நேற்று ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. முல்லைத்தீவு, நகரை அண்மித்த பகுதிகளில் பனிக்கட்டி மழை என்று கூறப்படும் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. ஆலங்கட்டி மழை தொடர்ந்தால் பயிர்களுக்குச் சேதம் ஏற்படும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். எமது வானொலியை கேட்க uyirfm.lk  இந்த லிங்கினை அழுத்தவும்.

வவுனியாவில் யானை தந்தங்களுடன் இருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது!

வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் விரைந்து செயற்பட்ட விசேட அதிரடிப்படையினர் நேற்றைய தினம் (03.08) இரவு 9 மணியளவில் இரண்டு யானை தந்தங்களை மீட்டுள்ளதுடன், கனகராயன்குளத்தில் கிளிநொச்சி பகுதியை சேர்ந்த இருவரை கைது செய்துள்ளனர். கைப்பற்றப்பட்ட யானை தந்தங்களையும் கைது செய்யப்பட்ட நபர்களையும் நேற்றைய தினம் இரவு கனகராயன்குளம் பொலிஸாரிடம் விசேட அதிரைப்படையினர் ஒப்படைத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றத்தில் […]

இலங்கையில் இதய நோய்ப்பாதிப்பால் அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்

இலங்கையில் இதய நோய் காரணமாக நாளொன்றுக்கு 120 இற்கும் 150 இற்கும் இடையிலானோர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் இருதய நோய்ப் பிரிவின் பிரதானி விசேட வைத்திய நிபுணர் நாமல் கமகே கூறினார். இருதய நோய் சம்பந்தமாக மூன்றாம் நிலை சிகிச்சை செய்யும் போது அதிக செலவு ஏற்படுவதே இவ்வாறான மரணங்கள் ஏற்படுவதற்கு ஒரு காரணம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அனைத்து தரப்பினரும் இணைந்து இதற்காக தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்று விசேட வைத்திய […]

‘இந்தியன்–2’ படத்தில் நடிப்பது அரசியலுக்காகவா?கமல் விளக்கம்.

  பிரச்சனைகளில் சிக்கி 3 வருடங்களுக்கு மேல் முடங்கி இருந்த கமல்ஹாசனின் விஸ்வரூபம்–2 படம் வருகிற 10–ந் தேதி திரைக்கு வருகிறது. உலகம் முழுவதும் 5 ஆயிரம் தியேட்டர்களில் திரையிட திட்டமிட்டு உள்ளனர். தெலுங்கு, இந்தி மொழிகளிலும் வெளியாகிறது. இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. படத்தை விளம்பர படுத்தும் நிகழ்ச்சிக்காக மும்பை, ஐதராபாத் நகரங்களில் சுற்றுப்பயணத்தில் இருக்கிறார் கமல்ஹாசன். அப்போது அரசியல் சினிமா பற்றிய கேள்விகளுக்கு பதில் அளித்து பேசினார். இந்தியன்–2 படத்தில் […]

தரமற்ற பருப்பு வகைகள் சந்தையில்…. மக்களே அவதானம்!

நிறமூட்டப்பட்ட, தரமில்லாத பருப்பு வகைகள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றமை தெரியவந்துள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தின் பல இடங்களில் இவ்வாறான தரமற்ற நிறமூட்டப்பட்ட பருப்புவகைள் விற்பனை செய்யப்படுகின்றமை தெரியவந்துள்ளது. இந்த பருப்பை கழுவும் போது நீர் சிவப்பு நிறமாக மாறும். இந்த பருப்பு மிகவும் சிறியதாகும். பருப்பை வேகவைக்க வழமையை விட கூடுதலான நேரம் எடுக்கும் என்றும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இது பற்றி மக்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும். இவ்வாறான பருப்பு வகைகள் தொடர்பாக […]

அட்லீ-விஜய் படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா?

அட்லீ-விஜய் மூன்றாவது முறையாக இணைகிறார்கள் என்றே தகவல் ரசிகர்களுக்கு குஷி தான். AGS நிறுவனம் தயாரிக்க இருக்கும் இப்படம் குறித்து வேறு எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. ஆனால் அவ்வப்போது சில விஷயங்கள் படம் குறித்து வெளியாகிய வண்ணம் உள்ளது. தற்போது படத்தின் இசையமைப்பாளர் குறித்து சமூக வலைதளத்தில் ஒரு பிரபலத்தின் பெயர் அடிபடுகிறது. அது வேறுயாரும் இல்லை இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் என்று தான் கூறப்படுகிறது. மெர்சலில் தளபதியை ரசிக்க வைத்த ஏ.ஆர் ரகுமான் சர்காரிலும் […]

உயிரிழந்த பிரித்தானிய றகர் வீரர்களுக்கு ஹெரோயின் விற்பனை செய்தவருக்கு விளக்கமறியல்

இலங்கையில் உயிரிழந்த பிரித்தானிய நாட்டு றகர் அணி வீரர்கள் இருவருக்கு ஹெரோயின் விற்பனை செய்த சந்தேகநபர் எதிர்வரும் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 38 வயதுடைய செனரத் பிரேமதிலக சில்வா என்ற நபர் நேற்று வௌ்ளவத்தை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இதனைக் கூறியுள்ளார். நட்புறவு றகர் போட்டியில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்திருந்த பிரித்தானிய நாட்டு றகர் அணியின் இரண்டு வீரர்கள் கடந்த மே மாதம் உயிரிழந்திருந்தனர். […]