Category Archives: இலங்கை

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை அதிகரிப்பு.

பாணின் விலையை இன்று நள்ளிரவு முதல் அதிகாரிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் 450 கிராம் எடை கொண்டு பாண் ஒன்றிற்கான விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எமது வானொலியை கேட்க uyirfm.lk  இந்த லிங்கினை அழுத்தவும்.

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிக்கிறது.

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார். 95 ஒக்டைன் பெற்றோல் 2 ஆல் அதிகரிக்கப்படுவதுடன், சுப்பர் டீசல் 1 ரூபாவாலும் அதிகரிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். அதன்படி 95 ஒக்டைன் பெற்றோல் 155 ரூபாவில் இருந்த 157 ரூபாவாகவும், சுப்பர் டீசல் 129 ரூபாவில் இருந்து 130 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் 92 ஒக்டைன் பெற்றோல் விலையில் மாற்றங்கள் இல்லை என்று அவர் கூறியுள்ளார். புதிய எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கமைவாக இந்த […]

ரயில்வே ஊழியர்களின் பிரச்சினையை தீர்க்க மங்கள உறுதி..!

ரயில்வே ஊழியர்களின் ஊதியம் தொடர்பான முரண்பாடுகள் மூன்று மாதங்களுக்குள் தீர்க்கப்படும் என, நிதியமைச்சர் மங்கள சமரவீர உறுதியளித்துள்ளார். அத்துடன், பணிநிறுத்தத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறும் ரயில்வே ஊழியர்களுக்கு நிதியமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். பேச்சுவார்த்தைக்கு முன்னர் பணிப்புறக்கணிப்பை நிறுத்தாத பட்சத்தில் எந்தவொரு தொழிற்சங்கங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த தான் தயாரில்லை என்பது தனது கொள்கை என்றும் நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அமைச்சர் குறிப்பிட்டார். மேலும், ரயில்வே ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு ஆட்சேபனை […]

கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த ஜனாதிபதி…!

உடல் நலக்குறைவால் ​நேற்று மாலை மரணமடைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி குடும்பத்தினருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுதாபம் தெரிவித்துள்ளார். காவேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தி.மு.க தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணியளவில் காலமானார். இதனை அடுத்து, பல தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், மூத்த அரசியல் தலைவருமான மு.கருணாநிதி அவர்களின் மறைவுச் செய்தி என்னை ஆழ்ந்த துயரத்தில் […]

முல்லைத்தீவில் தப்பியோடிய கைதிகள்…!

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற வழக்கிற்காக அழைத்துச் செல்லப்பட்ட 4 கைதிகள் நேற்று மாலை தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு பிரதேசத்தில் இடம்பெற்ற இரண்டு கொலைகள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த நான்கு கைதிகளே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாகவும்,தப்பிச் சென்ற கைதிகளைத் தேடி சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து விஷேட நடவடிக்கை ஒன்றை நேற்று ஆரம்பித்துள்ளனர். வவுனியா சிறைச்சாலையில் இருந்து முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட கைதிகளே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர் என்றும்,சம்பவம் தொடர்பில் […]

சம்பள உயர்வு தொடர்பில் எந்தவொரு யோசனைகளும் முன்வைக்கப்படவில்லை.

பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பள உயர்வு தொடர்பில் தன்னிடமே அல்லது அமைச்சரவையிலோ எந்தவொரு யோசனைகளும் முன்வைக்கப்படவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் பத்திரிகைகளில் மாத்திரமே தெரிவிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களின் அலுவலக செலவினங்கள் அதிகரித்துள்ள நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற கட்சியின் தலைவர்கள் கூட்டத்தில் இது பற்றி ஒரு யோசனை […]

பரீட்சை நிலையங்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு..!

க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறும் பரீட்சை நிலையங்களுக்காக விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதென பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையங்களுக்கும், பிரதேச வினாத்தாள் சேகரிப்பு நிலையங்களுக்கும் தலா மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள். ஒவ்வொரு பரீட்சை நிலையத்தைச் சார்ந்ததாகவும் பொலிஸ் கண்காணிப்பு சேவைகள் இடம்பெறுகின்றன. அவ்வாறே வினாத்தாள்களையும், விடைத்தாள்களையும் ஏற்றிச் செல்லும் வாகனங்களுடனும் தலா இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்பதும் தெரியவந்துள்ளது. எமது வானொலியை கேட்க uyirfm.lk  இந்த லிங்கினை அழுத்தவும்.

பஸ் உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

பஸ் போக்குவரத்து சேவையில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி, எதிர்வரும் 12 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிமுதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, மாகாண பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் எதிர்வரும் 10 ஆம் திகதி, டீசல் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படுகையில், லீற்றரின் விலை 10 ரூபாயால் அதிகரிக்கப்படும் பட்சத்தில் ஆகக் குறைந்த பஸ் கட்டணம் உள்ளடங்களாக பஸ் கட்டணமும் அதிகரிக்கப்படும் என, அகில இலங்கை பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.   எமது வானொலியை […]

புலமைப் பரீட்சை எழுத இருந்த மாணவர்கள் மீது குளவி தாக்குதல்.

அநுராதபுரம் – பதவிய பிரதேசத்தில் குளவி கொட்டுக்கு இழக்காகி பாதிக்கப்பட்ட சுமார் 136 பேர் நேற்று மாலை பதவிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பதவிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் நேற்று இடம்பெற்ற பூஜை வழிபாட்டின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்களில் 84 பேர் மாணவர்கள் என்பதுடன், 52 பேர் பெற்றோர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். இன்றைய தினம் இடம்பெறுகின்ற தரம் 5 புலமைப் பரீட்சை எழுத இருந்த மாணவர்களே பாதிக்கப்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளான தாயும், மகளும்.

மஹியங்கனை, ஹத்தத்தாவ கிராமத்தில் பாடசாலை மாணவி ஒருவரும் தாயும் இன்று காலை காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்து மஹியங்களை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று இடம்பெறுகின்ற புலமைப் பரிசில் பரீட்சைக்காக தாயுடன் சென்று கொண்டிருந்த போதே இருவரும் இவ்வாறு இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளனர். மஹியங்கனை, ஹத்தத்தாவ 80வது ஏக்கர் பிரதேசத்தில் வசிக்கும் சயுரி சத்சரனி என்ற மாணவியும் சேபாலிகா குமாரி (35) என்ற தாயுமே சம்பவத்தில் காயமடைந்துள்ளனர். இருவரும் சென்று கொண்டிருக்கும் போது வீதியின் ஓரத்தில் இருந்த […]