Home » Articles posted by Viththija

Author Archives: Viththija

மீண்டும் எம்.ஜி.ஆர் வாழ்க்கை ஆரம்பம்

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு ‘எம்.ஜி.ஆர்’ என்ற பெயரிலேயே திரைப்படமாக உருவாகிறது. காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை “காமராஜ்“ என்ற பெயரில் படமாக தயாரித்து வெளியிட்ட பாலகிருஷ்ணன் ‘எம்.ஜி.ஆர்’ படத்தை இயக்கி தயாரிக்கிறார். எம்.ஜி.ஆரைப் போன்றே முகத்தோற்றம் கொண்ட சதீஷ்குமார் எம்.ஜி.ஆர் பாத்திரத்தில் நடிக்கிறார். அவரது மனைவி ஜானகியாக ரித்விகா நடிக்கிறார். எம்.ஆர்.ராதாவாக பாலா சிங், டைரக்டர் பி.ஆர்.பந்துலுவாக ஒய்.ஜி.மகேந்திரன், எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணியாக மலையாள நடிகர் ரகு, பாய்ஸ் நாடக கம்பெனி உரிமையாளராக தீன தயாளன், […]

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை அதிகரிப்பு.

பாணின் விலையை இன்று நள்ளிரவு முதல் அதிகாரிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் 450 கிராம் எடை கொண்டு பாண் ஒன்றிற்கான விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எமது வானொலியை கேட்க uyirfm.lk  இந்த லிங்கினை அழுத்தவும்.

பிக்பாஸில் இருந்து வெளியேறியதும் திருமணம் செய்த டேனி!

பிக்பாஸில் இருந்து நேற்று எலிமினேட் ஆனவர் தான் டேனியல். வீட்டில் எப்போதுமே கலகலப்பாக இருக்கும் ஒரு நபர். ஆனால் எலிமினேஷன் நாமினேஷனில் இவரது பெயரும் இருந்ததால் இவரை மக்கள் வெளியேற்றி விட்டனர். ஆனால் அதுவும் நல்லது தான் போல என்று டேனி தற்சமயம் நல்லதொரு காரியத்தை புரிந்துள்ளார். அவர் நீண்டகாலமாக காதலித்து வந்த காதலி குட்டுவை திருமணம் செய்ய உள்ளாராம். தற்போது இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். எமது வானொலியை கேட்க uyirfm.lk  இந்த லிங்கினை அழுத்தவும்.   […]

மெர்சல் படத்துக்கு கிடைத்த அதிஷ்டம்

விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மெர்சல்’. அட்லீ இயக்கத்தில் கடந்த வருடம் ரிலீஸான படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்திருந்தார். இதில் நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா என மூன்று ஹீரோயின்கள் நடித்தனர். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் மத்திய அரசின் திட்டங்களான டிஜிட்டல் இந்தியா, ஜி.எஸ்.டி. ஆகியவற்றைப் பற்றி வசனங்கள் இடம்பெற்றிருந்ததால், சில பிரச்சனைகள் எழுந்தது. பின்னர் சர்ச்சைகளை கடந்து இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு […]

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிக்கிறது.

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார். 95 ஒக்டைன் பெற்றோல் 2 ஆல் அதிகரிக்கப்படுவதுடன், சுப்பர் டீசல் 1 ரூபாவாலும் அதிகரிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். அதன்படி 95 ஒக்டைன் பெற்றோல் 155 ரூபாவில் இருந்த 157 ரூபாவாகவும், சுப்பர் டீசல் 129 ரூபாவில் இருந்து 130 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் 92 ஒக்டைன் பெற்றோல் விலையில் மாற்றங்கள் இல்லை என்று அவர் கூறியுள்ளார். புதிய எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கமைவாக இந்த […]

வெள்ளக்காடாக காணப்படும் கேரளா…!

கேரளாவில் பெய்து வருகின்ற தொடர் மழை காரணமாக இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதோடு, பலர் காயங்களுக்கும் உள்ளாகியுள்ளனர். அத்தோடு, கேரளா முழுவதும் வெள்ளக்காடாக காணப்படுகின்றது. கடந்த சில நாட்களாக கேரளாவில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், நேற்று 24 மணி நேரமும் தொடர்ச்சியாக மழை பெய்தவண்ணம் உள்ளதால், இதில் வெள்ளம் மற்றும் இடி, மின்னல், புயல் என்பவற்றின் தாக்கம் காரணமாக உயிரிழப்புக்கள் நேர்ந்துள்ளது. இந்நிலையில், அங்குள்ள ஆறுகள், நதிகள் அனைத்தும் பெருக்கெடுத்து ஓடுவதால், கேரளாவின் பல […]

ரயில்வே ஊழியர்களின் பிரச்சினையை தீர்க்க மங்கள உறுதி..!

ரயில்வே ஊழியர்களின் ஊதியம் தொடர்பான முரண்பாடுகள் மூன்று மாதங்களுக்குள் தீர்க்கப்படும் என, நிதியமைச்சர் மங்கள சமரவீர உறுதியளித்துள்ளார். அத்துடன், பணிநிறுத்தத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறும் ரயில்வே ஊழியர்களுக்கு நிதியமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். பேச்சுவார்த்தைக்கு முன்னர் பணிப்புறக்கணிப்பை நிறுத்தாத பட்சத்தில் எந்தவொரு தொழிற்சங்கங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த தான் தயாரில்லை என்பது தனது கொள்கை என்றும் நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அமைச்சர் குறிப்பிட்டார். மேலும், ரயில்வே ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு ஆட்சேபனை […]

7 ரிக்டர் நிலநடுக்கம் – நிலை குலையாமல் தொழுகை நடத்திய நபர்!

பல்வேறு தீவுகளை கொண்ட இந்தோனேசியா நாடு அதிக அளவில் நிலநடுக்கம் ஏற்படும் நெருப்பு வளைய பகுதியில் அமைந்துள்ளது. இதனால் இங்கு அடிக்கடி பூகம்பம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், சுமத்ராவை ஒட்டியுள்ள பாலி மற்றும் லம்பாக் தீவின் அருகே கடந்த திங்கட்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7 ஆக நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் இருந்த பல வீடுகளும், கட்டிடங்களும் இடிந்துள்ளது. இதனால் மக்கள் அலறியடித்து கொண்டு தெருக்களில் […]

306 ஓட்டங்களைப் பெற்றது இலங்கை அணி.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டியில் முதலில் துடுபபெடுத்தாடிய இலங்கை அணி 306 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. 39 ஓவர்களில் 7 விக்கட் இழப்பிற்கு இலங்கை அணி அந்த ஓட்ட எண்ணிக்கையை பெற்றுள்ளது. மழை காரணமாக போட்டி 39 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட நிலையில், இலங்கை அணி சார்பாக தசுன் சானக 65 ஓட்டங்களையும், திஸர பெரேரா மற்றும் குசல் ஜனித் பெரேரா இருவரும் தலா 51 ஓட்டங்களைப் பெற்றுள்ளனர். இந்தப் போட்டி கண்டி பல்லேகல […]

விதியை மீறி கருணாநிதி மறைவை சொன்ன பிக்பாஸ்.

தமிழ்நாட்டின் மூத்த தலைவர் கருணாநிதி அவர்கள் நேற்று மாலை 6 .10 மணி அளவில் உயிர் பிரிந்துள்ளது. இதனால் தமிழ்நாட்டு மக்கள் படும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த தகவல் தெரிந்து கொள்ள முடியாத பிக்பாஸ் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக வெளியுலக நிகழ்வுகளை பிக்பாஸ் வீட்டில் சொல்லக்கூடாது என்று விதிமுறை உள்ளது. ஆனால் தமிழுக்கும், தமிழகத்துக்கும் பெரிய தொண்டாற்றிய கலைஞரின் மரணத்தால் இந்த விதிமுறையை தளரத்தியுள்ளனர். போட்டியாளர்கள் கருணாநிதி அவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தியமையும் குறிப்பிடத்தக்கது. எமது […]