Monthly Archives: August 2018

கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதியில்லை – அரசு அறிவிப்பு.!

உடல்நிலை குறைவின் காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி சிகிச்சை பலனின்றி இன்று மாலை சுமார் 6.10 அளவில் உயிரிழந்தார். திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு அமெரிக்க அரசு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துவரக்கூடிய சூழலில், கருணாநிதியின் உடலை சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதியின் அருகே அடக்கம் செய்ய முதல்வரிடம் அனுமதி கேட்கப்பட்டதாகவும் ஆனால் அரசு தரப்பிலிருந்து எவ்வித உறுதியான தகவலும் தெரிவிக்கப்படவில்லை என செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார் […]

கணவருடன் களமிறங்கியுள்ள சிம்ரன்.

தமிழ் சினிமாவில் அஜித், விஜய், சூர்யா, கமல் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து உச்சத்தில் இருந்தவர் நடிகை சிம்ரன். திருமணத்திற்கு பிறகு தற்போது திரையுலகில் ரீ- என்ட்ரி கொடுத்துள்ளார். ´ஜோக்கர்´ பட ஹீரோ குரு சோமசுந்தரம், லட்சுமி ப்ரியா இணைந்து நடித்துள்ள ´ஓடு ராஜா ஓடு´ என்ற படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர்களான நிஷாந்த் மற்றும் ஜத்தின் இயக்கியுள்ள இந்த படத்தில் சிம்ரனின் கணவர் தீபக் பக்காவும் இணைந்து நடித்துள்ளார். […]

சம்பள உயர்வு தொடர்பில் எந்தவொரு யோசனைகளும் முன்வைக்கப்படவில்லை.

பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பள உயர்வு தொடர்பில் தன்னிடமே அல்லது அமைச்சரவையிலோ எந்தவொரு யோசனைகளும் முன்வைக்கப்படவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் பத்திரிகைகளில் மாத்திரமே தெரிவிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களின் அலுவலக செலவினங்கள் அதிகரித்துள்ள நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற கட்சியின் தலைவர்கள் கூட்டத்தில் இது பற்றி ஒரு யோசனை […]

திமுக தலைவர் கருணாநிதி காலமானார் – அதிர்ச்சியில் தமிழகம்.

உடல் நல குறைவின் காரணமாக கடந்த 28 ஆம் திகதி நள்ளிரவில் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கலைஞருக்கு தொடர்ந்து 11 வது நாளாக மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வந்துள்ளனர். வயது முதிர்வின் காரணமாக மருத்துவ சிகிச்சைகளுக்கு கருணாநிதியின் உடல் ஒத்துழைக்காத காரணத்தினால் அவருக்கு சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி காலமானதாக காவேரி மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. […]

பரீட்சை நிலையங்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு..!

க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறும் பரீட்சை நிலையங்களுக்காக விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதென பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையங்களுக்கும், பிரதேச வினாத்தாள் சேகரிப்பு நிலையங்களுக்கும் தலா மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள். ஒவ்வொரு பரீட்சை நிலையத்தைச் சார்ந்ததாகவும் பொலிஸ் கண்காணிப்பு சேவைகள் இடம்பெறுகின்றன. அவ்வாறே வினாத்தாள்களையும், விடைத்தாள்களையும் ஏற்றிச் செல்லும் வாகனங்களுடனும் தலா இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்பதும் தெரியவந்துள்ளது. எமது வானொலியை கேட்க uyirfm.lk  இந்த லிங்கினை அழுத்தவும்.

பிக்போஸ் இல் அடுத்ததாக வெளியேறுவது…இவர்தானா?

சென்றவாரம் ஷரீக் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டது மற்ற போட்டியாளர்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. இந்நிலையில் இந்த வார எலிமினேஷன் லிஸ்டில் 4 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். சென்ட்ராயன், பொன்னம்பலம், யாஷிகா ஆகியோர் வாக்குகள் அடிப்படையில் எலிமினேஷன் லிஸ்டில் உள்ளனர். சென்ட்ராயனுக்கு எதிராக மட்டும் அதிகபட்சமாக 7 பேர் வாக்களித்தனர். மேலும் வீட்டின் தலைவியாக உள்ள யாஷிகா வேறு ஒரு போட்டியாளரை எலிமினேட் செய்ய தேர்வு செய்ய வாய்ப்பு கொடுக்கப்பட்டது, அப்போது அவர் ஜனனியை தேர்ந்தெடுத்தார். அதனால் இந்த […]

பஸ் உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

பஸ் போக்குவரத்து சேவையில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி, எதிர்வரும் 12 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிமுதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, மாகாண பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் எதிர்வரும் 10 ஆம் திகதி, டீசல் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படுகையில், லீற்றரின் விலை 10 ரூபாயால் அதிகரிக்கப்படும் பட்சத்தில் ஆகக் குறைந்த பஸ் கட்டணம் உள்ளடங்களாக பஸ் கட்டணமும் அதிகரிக்கப்படும் என, அகில இலங்கை பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.   எமது வானொலியை […]

வியப்பில் இருந்து மீளாத ரஹ்மான்..!

  ரஜினியின் ‘2.0’, விஜயின் ‘சர்கார்’, சிவகார்த்திகேயன் – ரவிக்குமார் படம், மணிரத்னத்தின் ‘செக்கச்சிவந்த வானம்’ என தமிழிலேயே நிறைய படங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார் ஏ.ஆர்.ரஹ்மான். தவிர பொலிவுட், ஹொலிவுட் படங்கள், இசை நிகழ்ச்சிகள் என தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கின்றார் இசைப்புயல். இந்நிலையில் அவருடைய கதை – தயாரிப்பில் உருவாகும் ’99 சோங்க்ஸ்’ படத்தின் வெளியீட்டு வேளைகளில் இறங்கியிருக்கிறார். அண்மையில் செவ்வி ஒன்றில் கருத்து வெளியிட்ட அவர், “இந்தப் படத்திற்கான உழைப்பு பெரிது, அதனால் நிறைய காலமும் தேவைப்பட்டது. […]

இலங்கைக்கு வெற்றி இலக்கு 364 ஓட்டங்கள்.

தென்னாபிரிக்க மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டி இன்று கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெறுகிறது. இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர்கள் நிறைவில் 07 விக்கட்டுக்களை இழந்து 363 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது. அந்த அணி சார்பாக அதிகபட்சமாக ரீஸா 102 ஓட்டங்களையும், டுமினி 92 ஓட்டங்களையும், டேவிட் மில்லர் 51 ஓட்டங்களையும் பெற்றுக் […]

புலமைப் பரீட்சை எழுத இருந்த மாணவர்கள் மீது குளவி தாக்குதல்.

அநுராதபுரம் – பதவிய பிரதேசத்தில் குளவி கொட்டுக்கு இழக்காகி பாதிக்கப்பட்ட சுமார் 136 பேர் நேற்று மாலை பதவிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பதவிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் நேற்று இடம்பெற்ற பூஜை வழிபாட்டின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்களில் 84 பேர் மாணவர்கள் என்பதுடன், 52 பேர் பெற்றோர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். இன்றைய தினம் இடம்பெறுகின்ற தரம் 5 புலமைப் பரீட்சை எழுத இருந்த மாணவர்களே பாதிக்கப்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]