Monthly Archives: August 2018

மெர்சல் படத்துக்கு கிடைத்த அதிஷ்டம்

விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மெர்சல்’. அட்லீ இயக்கத்தில் கடந்த வருடம் ரிலீஸான படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்திருந்தார். இதில் நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா என மூன்று ஹீரோயின்கள் நடித்தனர். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் மத்திய அரசின் திட்டங்களான டிஜிட்டல் இந்தியா, ஜி.எஸ்.டி. ஆகியவற்றைப் பற்றி வசனங்கள் இடம்பெற்றிருந்ததால், சில பிரச்சனைகள் எழுந்தது. பின்னர் சர்ச்சைகளை கடந்து இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு […]

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிக்கிறது.

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார். 95 ஒக்டைன் பெற்றோல் 2 ஆல் அதிகரிக்கப்படுவதுடன், சுப்பர் டீசல் 1 ரூபாவாலும் அதிகரிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். அதன்படி 95 ஒக்டைன் பெற்றோல் 155 ரூபாவில் இருந்த 157 ரூபாவாகவும், சுப்பர் டீசல் 129 ரூபாவில் இருந்து 130 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் 92 ஒக்டைன் பெற்றோல் விலையில் மாற்றங்கள் இல்லை என்று அவர் கூறியுள்ளார். புதிய எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கமைவாக இந்த […]

வெள்ளக்காடாக காணப்படும் கேரளா…!

கேரளாவில் பெய்து வருகின்ற தொடர் மழை காரணமாக இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதோடு, பலர் காயங்களுக்கும் உள்ளாகியுள்ளனர். அத்தோடு, கேரளா முழுவதும் வெள்ளக்காடாக காணப்படுகின்றது. கடந்த சில நாட்களாக கேரளாவில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், நேற்று 24 மணி நேரமும் தொடர்ச்சியாக மழை பெய்தவண்ணம் உள்ளதால், இதில் வெள்ளம் மற்றும் இடி, மின்னல், புயல் என்பவற்றின் தாக்கம் காரணமாக உயிரிழப்புக்கள் நேர்ந்துள்ளது. இந்நிலையில், அங்குள்ள ஆறுகள், நதிகள் அனைத்தும் பெருக்கெடுத்து ஓடுவதால், கேரளாவின் பல […]

ரயில்வே ஊழியர்களின் பிரச்சினையை தீர்க்க மங்கள உறுதி..!

ரயில்வே ஊழியர்களின் ஊதியம் தொடர்பான முரண்பாடுகள் மூன்று மாதங்களுக்குள் தீர்க்கப்படும் என, நிதியமைச்சர் மங்கள சமரவீர உறுதியளித்துள்ளார். அத்துடன், பணிநிறுத்தத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறும் ரயில்வே ஊழியர்களுக்கு நிதியமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். பேச்சுவார்த்தைக்கு முன்னர் பணிப்புறக்கணிப்பை நிறுத்தாத பட்சத்தில் எந்தவொரு தொழிற்சங்கங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த தான் தயாரில்லை என்பது தனது கொள்கை என்றும் நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அமைச்சர் குறிப்பிட்டார். மேலும், ரயில்வே ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு ஆட்சேபனை […]

7 ரிக்டர் நிலநடுக்கம் – நிலை குலையாமல் தொழுகை நடத்திய நபர்!

பல்வேறு தீவுகளை கொண்ட இந்தோனேசியா நாடு அதிக அளவில் நிலநடுக்கம் ஏற்படும் நெருப்பு வளைய பகுதியில் அமைந்துள்ளது. இதனால் இங்கு அடிக்கடி பூகம்பம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், சுமத்ராவை ஒட்டியுள்ள பாலி மற்றும் லம்பாக் தீவின் அருகே கடந்த திங்கட்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7 ஆக நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் இருந்த பல வீடுகளும், கட்டிடங்களும் இடிந்துள்ளது. இதனால் மக்கள் அலறியடித்து கொண்டு தெருக்களில் […]

306 ஓட்டங்களைப் பெற்றது இலங்கை அணி.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டியில் முதலில் துடுபபெடுத்தாடிய இலங்கை அணி 306 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. 39 ஓவர்களில் 7 விக்கட் இழப்பிற்கு இலங்கை அணி அந்த ஓட்ட எண்ணிக்கையை பெற்றுள்ளது. மழை காரணமாக போட்டி 39 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட நிலையில், இலங்கை அணி சார்பாக தசுன் சானக 65 ஓட்டங்களையும், திஸர பெரேரா மற்றும் குசல் ஜனித் பெரேரா இருவரும் தலா 51 ஓட்டங்களைப் பெற்றுள்ளனர். இந்தப் போட்டி கண்டி பல்லேகல […]

விதியை மீறி கருணாநிதி மறைவை சொன்ன பிக்பாஸ்.

தமிழ்நாட்டின் மூத்த தலைவர் கருணாநிதி அவர்கள் நேற்று மாலை 6 .10 மணி அளவில் உயிர் பிரிந்துள்ளது. இதனால் தமிழ்நாட்டு மக்கள் படும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த தகவல் தெரிந்து கொள்ள முடியாத பிக்பாஸ் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக வெளியுலக நிகழ்வுகளை பிக்பாஸ் வீட்டில் சொல்லக்கூடாது என்று விதிமுறை உள்ளது. ஆனால் தமிழுக்கும், தமிழகத்துக்கும் பெரிய தொண்டாற்றிய கலைஞரின் மரணத்தால் இந்த விதிமுறையை தளரத்தியுள்ளனர். போட்டியாளர்கள் கருணாநிதி அவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தியமையும் குறிப்பிடத்தக்கது. எமது […]

தொடர் தோல்விகளுக்கு இலங்கை முற்றுப்புள்ளி வைக்குமா?

இலங்கை, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் நான்காவது போட்டி, பல்லேகலயில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இத்தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் தோற்று தொடரை ஏற்கெனவே இழந்துள்ள இலங்கை, இப்போட்டியில் எவ்வாறாவது வென்று விட வேண்டும் என்ற மனநிலையில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொடரின் மூன்று போட்டிகளிலுமே உபுல் தரங்க, குசல் மென்டிஸ் ஆகியோர் பிரகாசிக்காதபோதும் குழாமில் வேறு துடுப்பாட்ட வீரர்கள் இல்லாத நிலையில் இவர்கள் இப்போட்டியிலும் விளையாடுவார்கள் […]

கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த ஜனாதிபதி…!

உடல் நலக்குறைவால் ​நேற்று மாலை மரணமடைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி குடும்பத்தினருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுதாபம் தெரிவித்துள்ளார். காவேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தி.மு.க தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணியளவில் காலமானார். இதனை அடுத்து, பல தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், மூத்த அரசியல் தலைவருமான மு.கருணாநிதி அவர்களின் மறைவுச் செய்தி என்னை ஆழ்ந்த துயரத்தில் […]

முல்லைத்தீவில் தப்பியோடிய கைதிகள்…!

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற வழக்கிற்காக அழைத்துச் செல்லப்பட்ட 4 கைதிகள் நேற்று மாலை தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு பிரதேசத்தில் இடம்பெற்ற இரண்டு கொலைகள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த நான்கு கைதிகளே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாகவும்,தப்பிச் சென்ற கைதிகளைத் தேடி சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து விஷேட நடவடிக்கை ஒன்றை நேற்று ஆரம்பித்துள்ளனர். வவுனியா சிறைச்சாலையில் இருந்து முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட கைதிகளே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர் என்றும்,சம்பவம் தொடர்பில் […]