Home » இலங்கை » ரயில்வே ஊழியர்களின் பிரச்சினையை தீர்க்க மங்கள உறுதி..!

ரயில்வே ஊழியர்களின் பிரச்சினையை தீர்க்க மங்கள உறுதி..!

ரயில்வே ஊழியர்களின் ஊதியம் தொடர்பான முரண்பாடுகள் மூன்று மாதங்களுக்குள் தீர்க்கப்படும் என, நிதியமைச்சர் மங்கள சமரவீர உறுதியளித்துள்ளார்.

அத்துடன், பணிநிறுத்தத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறும் ரயில்வே ஊழியர்களுக்கு நிதியமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.

பேச்சுவார்த்தைக்கு முன்னர் பணிப்புறக்கணிப்பை நிறுத்தாத பட்சத்தில் எந்தவொரு தொழிற்சங்கங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த தான் தயாரில்லை என்பது தனது கொள்கை என்றும் நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், ரயில்வே ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு ஆட்சேபனை தெரிவித்த அமைச்சர், அது ஒட்டுமொத்த அரச துறையையும் நெருக்கடிக்கு உள்ளாக்கும் என்றும் தெரிவித்ததுடன் ,

அமைச்சரவை பத்திரத்தில் பரிந்துரைக்கப்பட்டதற்கு அமைய ரயில்வே ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படின், அது அரசாங்க சேவையில் ஈடுபடும் ஏனைய ஊழியர்களிடையே பாரிய சம்பள முரண்பாட்டை தோற்றுவிக்கும் எனக் குறிப்பிட்டார்.

ஆணைக்குழுவொன்றை நியமித்து இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், ரயில்வே ஊழியர்களின் இந்த திடீர் வேலைநிறுத்தமானது நியாயமற்றதாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

எமது வானொலியை கேட்க uyirfm.lk  இந்த லிங்கினை அழுத்தவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *