Home » வெளிநாடு » தன் உயிரைக் கொடுத்து குழந்தைகளின் உயிரைக்காத்த தாய்!

தன் உயிரைக் கொடுத்து குழந்தைகளின் உயிரைக்காத்த தாய்!

சீனாவில் ஹெனான் மாகாணம் ஷுசாங் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதைதொடர்ந்து அங்கிருந்து குடியிருப்பு வாசிகள் வீடுகளில் இருந்து வெளியேறிவிட்டனர். ஆனால் ஒரு வீட்டின் தாய் மற்றும் 2 குழந்தைகள் மட்டும் தீயில் சிக்கி கொண்டுள்ளனர்.

அவர்களால் தப்பிக்க முடியாதபடி வீட்டின் வெளியே தீ சூழ்ந்து கொண்டுள்ளது. இதனால் அந்த தாய் முதலில் தனது குழந்தைகளை காப்பாற்ற நினைத்து, வீட்டில் இருந்த பெரிய ‘பெட்ஷீட்டை’ ஜன்னல் வழியாக வீசியுள்ளார். அதை கட்டிடத்தின் கீழே நின்றிருந்த அக்கம் பக்கத்தினர் வலை போல் விரித்து பிடித்துக் கொண்டனர்.

முதலில் தனது 9 வயது மகனை ஜன்னல் வழியாக வீசி, பின்னர் 3 வயது மகளையும் தூக்கி எறிந்துள்ளார்.
கீழே நின்றவர்களை அவர்களை பெட்ஷீட்டில் லாவகமாக பிடித்து காப்பாற்றியுள்ளனர். பின்னர் அவரையும் குதிக்கும்படி வலியுறுத்தியுள்ளனர். அதற்கு அவர் முயற்சி செய்த நிலையில், புகை மூட்டம் அதிகமானதால் அவர் தீப்பிடித்த வீட்டிற்குள்ளேயே மயங்கி விழுந்துள்ளார்.

இதற்கிடையே அங்கு வந்த தீயணைப்பு படையினர் காயங்களுடன் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்துள்ளார்.

 

எமது வானொலியை கேட்க uyirfm.lk  இந்த லிங்கினை அழுத்தவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *