Home » மருத்துவம் » கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் செம்பருத்தி எண்ணெய்…!

கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் செம்பருத்தி எண்ணெய்…!

அனைத்து விதமான கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் சக்தி செம்பருத்தி எண்ணெய்க்கு உண்டு. இந்த எண்ணெய் தயாரிப்பது எப்படி..

தேவையான பொருட்கள்

செம்பருத்தி பூ – 10
தேங்காய் எண்ணெய் – 250 கிராம்
வெந்தயம் – 1 தேக்கரண்டி

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வெந்தயம் சேர்க்கவும். பின்னர் செம்பருத்தி பூ போட்டு நன்கு கொதிக்க வைத்த பின்னர் ஆற வைத்து ஆறியதும் வடிகட்டி ஒரு போத்தலில் சேகரித்து வைத்து கொள்ளவும்.

குளிக்க செல்லும் முன், இந்த எண்ணெயை தலையில் தேய்த்து சுமார் 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். உங்கள் முடி மற்றும் உச்சந்தலையில் இந்த எண்ணெய் மசாஜ் செய்து பிறகு தலைக்கு குளிக்கவும். வாரம் ஒரு முறை இந்த எண்ணெயை பயன்படுத்தி வந்தால் முடி கருப்பாகவும், அடர்த்தியாகவும் வளரும்

இந்த எண்ணெயை தினமும் தலைக்கு தேய்த்து வந்தால் முடி வளர்ச்சியை தூண்டுவதுடன் ,முடி பளபளப்பாகவும், மென்மையாகவும் இருக்கும்.அத்தோடு, பொடுகு மற்றும் நரைமுடியையும் போக்க மிகவும் சிறந்தது.

எமது வானொலியை கேட்க uyirfm.lk  இந்த லிங்கினை அழுத்தவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *