Home » வெளிநாடு » கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதியில்லை – அரசு அறிவிப்பு.!

கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதியில்லை – அரசு அறிவிப்பு.!

உடல்நிலை குறைவின் காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி சிகிச்சை பலனின்றி இன்று மாலை சுமார் 6.10 அளவில் உயிரிழந்தார்.

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு அமெரிக்க அரசு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துவரக்கூடிய சூழலில், கருணாநிதியின் உடலை சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதியின் அருகே அடக்கம் செய்ய முதல்வரிடம் அனுமதி கேட்கப்பட்டதாகவும் ஆனால் அரசு தரப்பிலிருந்து எவ்வித உறுதியான தகவலும் தெரிவிக்கப்படவில்லை என செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார் திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன்.

இந்த நிலையில், மெரினாவில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய இடம் ஒதுக்க இயலவில்லை எனவும், அதற்கு மாற்றாக ராஜாஜி, காமராஜர் நினைவிடங்களுக்கு அருகே இடம் ஒதுக்கி தர தயாராக உள்ளதாகவும் அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

முன்னதாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்த போது சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஒருவருக்கு மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைப்பதா என திமுக கேள்வியெழுப்பியது குறிப்பிடத்தக்கது.

எமது வானொலியை கேட்க uyirfm.lk  இந்த லிங்கினை அழுத்தவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *