Home » விளையாட்டு » உலகக்கிண்ணம் இங்கிலாந்திலா?

உலகக்கிண்ணம் இங்கிலாந்திலா?

கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தை, 2030ஆம் ஆண்டில் தமது நாட்டில் நடத்துவது குறித்த சாத்தியப்பாடுகளை ஆராய்ந்து வருவதாக, இங்கிலாந்து கால்பந்தாட்டச் சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்நிலையிலேயே, 2030ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை இங்கிலாந்தில் நடத்துவதற்கான சாத்தியப்பாடுகளை ஆராய்வதற்கு, இங்கிலாந்து கால்பந்தாட்டச் சங்கக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என, சங்கத்தின் தவிசாளர் கிரெக் கிளார்க் தெரிவித்தார்.

பிறீமியர் லீக் கால்பந்தாட்டப் போட்டிகள் மூலமாக, உலக அரங்கில் முக்கியமான கால்பந்தாட்ட நாடாகக் காணப்படும் இங்கிலாந்து, தாம் நடத்திய ஒரேயோர் உலகக் கிண்ணத் தொடரான 1966ஆம் ஆண்டுத் தொடரில், சம்பியன்களாகியிருந்தது. ஆனால் அதன் பின்னர், 2006ஆம் ஆண்டிலும் இவ்வாண்டிலும், உலகக் கிண்ணத் தொடரை நடத்துவதற்கு முயன்று, தோல்வியடைந்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் உலகக் கிண்ணத்தில் பங்குபற்றும் நாடுகளின் எண்ணிக்கை, 32இலிருந்து 48ஆக, 2026ஆம் ஆண்டில் அதிகரிக்கவுள்ள நிலையில், அத்தொடரை, கனடா, மெக்ஸிக்கோ, ஐக்கிய அமெரிக்கா ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்தவுள்ளன என்பதும் முக்கியமான விடயமாகும்.

 

எமது வானொலியை கேட்க uyirfm.lk  இந்த லிங்கினை அழுத்தவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *